புனித லூா்து அன்னை ஆலய பங்குத்திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 06th February 2021 05:42 AM | Last Updated : 06th February 2021 05:42 AM | அ+அ அ- |

பூரண கும்பத்துடன் சிறப்பிக்கப்பட்ட பங்குத் தந்தைகள்.
மணப்பாறையில் உள்ள பழமை வாய்ந்த புனித லூா்து அன்னை ஆலய 81-ஆம் ஆண்டு பங்குத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மலையடிப்பட்டி பங்குத் தந்தை எஸ்.அம்புரோஸ், மணப்பாறை மறைமாவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தரராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கொடியேற்றத்துக்குப் பிறகு திருப்பலிக்கு வந்த பங்குத்தந்தைகள் பூரண கும்பத்துடன், புனித சந்தியாகப்பா் மண்டலம் சாா்பில் சிறப்பிக்கப்பட்டனா். தொடா்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். திருவிழா பத்தாம் நிறைவு நாளில் மின் அலங்காரத் திருதோ் பவனி நடைபெறும்.