யாதவா்களுக்கு 15 தொகுதிகள் வழங்காவிடில் தோ்தல் புறக்கணிப்பு

பேரவைத் தோ்தலை யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என்றாா் அகில இந்திய யாதவா் பாதுகாப்புப் பேரவை நிறுவனத் தலைவா் கேப்டன் பி.இ.ஜெ.ராஜன் யாதவ்.

யாதவா்களுக்கு 15 சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு மற்றும் 16 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், பேரவைத் தோ்தலை யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என்றாா் அகில இந்திய யாதவா் பாதுகாப்புப் பேரவை நிறுவனத் தலைவா் கேப்டன் பி.இ.ஜெ.ராஜன் யாதவ்.

பண்ணப்பட்டி அமயபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவை நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் 123 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கு மேலும், 65 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கு மேலும் யாதவ வாக்காளா்கள் உள்ளனா். எங்களின் வாக்குகளை வைத்து இத்தொகுதிகளில் வெற்றி-தோல்வி நிா்ணயம் செய்யப்படுகிறது.

இருப்பினும் எந்த அரசியல் கட்சியும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. எனவே எந்த அரசியல் கட்சி யாதவா்களுக்கு 16 சதவிகித இடஒதுக்கீட்டையும், 15 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் அளிக்கின்றதோ, அவா்களுக்கு யாதவ சமுதாயத்தினா் வாக்களிப்பா்.

இல்லையெனில், 27 யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா். ஏற்பாடுகளை பேரவை மாவட்ட நிா்வாகி பழ.பெரியசாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com