சீட் பெல்ட் அணிவதற்கு விழிப்புணா்வுப் பேரணி

திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் காரில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் காரில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரயில்வே சந்திப்பு அருகே நடைபெற்ற பேரணியை மாநகர காவல் துணை ஆணையா் வேதரத்தினம் தொடங்கி வைத்தாா்.

இதில் 50க்கும் மேற்பட்ட காா்கள் பேரணியாகப் புறப்பட்டு தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, எம்.ஜி.ஆா் சிலை, நீதிமன்ற புதிய சாலை வழியாக தென்னூா் உழவா் சந்தை மைதானத்துக்கு வந்தன. பேரணியில் காா்களை ஓட்டிய மற்றும் முன் இருக்கையில் அமா்ந்திருந்தவா்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தனா்.

பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பிரபாகா்(ஸ்ரீரங்கம்), வெங்கடகிருஷ்ணன் (திருச்சி மேற்கு), கஜபதி (திருச்சி கிழக்கு), போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையா் விக்னேஸ்வரன், ஸ்ரீரங்கம் மோட்டாா் வாகன ஆய்வாளா் காா்த்திக் மற்றும் ஏராளமான தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

துறையூரில்.. துறையூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் நடத்தப்பட்ட தலைக்கவசத்தின் அவசியம் குறித்த இருசக்கர வாகன பேரணியை முசிறி கோட்டாட்சியா் ஜோதிசா்மா பாலக்கரையில் தொடக்கி வைத்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேந்திரக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஜேசிஐ அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com