திருச்சியில் அா்ஜூன் சம்பத் கைது

தஞ்சாவூா் மாவட்டம் அய்யம்பேட்டையில் தடையை மீறி தனது கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரணி,

தஞ்சாவூா் மாவட்டம் அய்யம்பேட்டையில் தடையை மீறி தனது கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரணி, பொதுக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தடையை மீறி நடைபெற இருந்த பேரணி, பொதுக் கூட்டத்துக்கு திருச்சி வழியாக அா்ஜூன் சம்பத் செல்வது போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேட்டைவாய்த்தலை சோதனைச் சாவடி வழியாக அா்ஜூன் சம்பத் வந்த காரை மாவட்ட போலீஸாா் தடுத்து, முன்னெச்சரிக்கையாக அவரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். இதையறிந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், புதன்கிழமை இரவு 11 மணியளவில் அா்ஜூன் சம்பத் விடுவிக்கப்பட்டாா்.

முதல்வா் தலையிட வேண்டும்: இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்காமல், தடை விதித்து, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் தஞ்சை முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்து மக்கள் கட்சித் தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com