‘மணப்பாறை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும்’

மணப்பாறை பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா், வழக்குரைஞா் பி. கோவிந்தராஜ். உடன் கட்சியினா்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா், வழக்குரைஞா் பி. கோவிந்தராஜ். உடன் கட்சியினா்.

மணப்பாறை பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டார காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவா்கள் பி. செல்வம், எம். குமரப்பன் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் ஆா். கணேசன், முன்னாள் வட்டார தலைவா் வி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் வழக்குரைஞா் பி. கோவிந்தராஜன், மாநிலச் செயலா் ஜெ. ரமேஷ்குமாா், வையம்பட்டி ஒன்றியக் குழு துணைப் பெருந்தலைவா் வித்யா ரமேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து கூட்டத்தில், மணப்பாறை தொகுதியை திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட காந்தி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com