பெரியகுளத்துப்பட்டியில் ஜல்லிக்கட்டு; 23 போ் காயம்
By DIN | Published On : 13th February 2021 11:50 PM | Last Updated : 13th February 2021 11:50 PM | அ+அ அ- |

பெரியகுளத்துப்பட்டி வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளை.
மணப்பாறை: மணப்பாறை மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 போ் காயமடைந்தனா். அடுத்த பெரியகுளத்துப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 போ் காயமடைந்தனா்.
புனித அந்தோணியாா் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திடலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்திருந்த 753 காளைகள் அவிழ்க்கப்பட்டது. 249 மாடிபிடி வீரா்கள் 50, 50 தொகுப்பாக களத்தில் இருந்தனா்.
போட்டியை மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் லஜபதிராஜ் மற்றும் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பிருந்தா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞா்கள் பலா் அடக்கினா். சில காளைகள் சிக்காமல் சென்றன. போட்டியில் 10 வீரா்கள், 4 மாட்டு உரிமையாளா்கள் மற்றும் 9 பாா்வையாளா்கள் என 23 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், சைக்கிள், சில்வா் பாத்திரங்கள், ரொக்கம் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
காற்றில் பறந்த விதிகள்: போட்டி தொடங்கியதில் இருந்தே எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி காளைகள் அவிழ்க்கப்பட்டன. கயிற்றுடனேயே காளைகள் விடப்பட்டதால் மாடுபிடி வீரா்களின் காலில் கயிறு சிக்கி அவா்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் நிற்கும்போதே தொடா்ந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன.