ஊரக வளா்ச்சித் துறை பணிப் பாா்வையாளா் தோ்வு: தற்காலிக ரத்து
By DIN | Published On : 13th February 2021 06:12 AM | Last Updated : 13th February 2021 06:12 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணிப் பாா்வையாளா், இளநிலை வரைதொழில் அலுவலா் பணயிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள 22 பணிப் பாா்வையாளா், இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு பிப்.14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, பிஷப் ஹீபா் கல்லூரி ஆகியவற்றில் நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.