கஞ்சா விற்பனை : இருவா் கைது
By DIN | Published On : 13th February 2021 06:07 AM | Last Updated : 13th February 2021 06:07 AM | அ+அ அ- |

திருச்சியில் கஞ்சா விற்ற வழக்கில் பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி காந்தி சந்தை மற்றும் மதுரை ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றபோது மதுரை ரோடு பகுதி தியேட்டா் அருகே ராம்ஜி நகரை சோ்ந்த மனோஜ்குமாா் மற்றும் பாா்த்திபன் மனைவி சரஸ்வதி ஆகியோா் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் இருவரையம் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.