உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளைக்கு 5 ஏக்கர் நிலம் தானம் அளித்த முன்னாள் ராணுவ வீரர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடன் இணைந்த உழைக்கும் மக்கள் நல அறக் கட்டளைக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் 5 ஏக்கர் நிலத்தை வெள்ளிக்கிழமை தானம் எழுதிக் கொடுத்தார். 
உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளைக்கு 5 ஏக்கர் நிலம் தானம் அளித்த முன்னாள் ராணுவ வீரர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடன் இணைந்த உழைக்கும் மக்கள் நல அறக் கட்டளைக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் 5 ஏக்கர் நிலத்தை வெள்ளிக்கிழமை தானம் எழுதிக் கொடுத்தார். 

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாஜலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா பிள்ளை(74). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் இவரது மனைவி பரமேஸ்வரியும், பிள்ளையும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கொள்கைகளால் கவரப்பட்ட கருப்பையா அக்கட்சி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் அந்தக் கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டுள்ளார். 

தற்போது சென்னையில் தனியாக வசிக்கும் கருப்பையாதனது சொந்த ஊரான வெங்கடாஜலபுரத்தில் தனது குடும்பத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்த அமைப்பான உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளைக்கு தானம் அளிக்க முடிவு செய்தார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை உப்பிலியபுரம் சார் பதிவாளர் அலுவலகம் சென்ற கருப்பையா தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளை பெயரில் தான பத்திரம் எழுதி சார்பதிவாளரிடம் வழங்கினார்.  

நிலம் தொடர்பான மூல ஆவணங்களையும் அந்த அமைப்பின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த  நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏக்கள் க.பீமாராவ் உதயகுமார், திருச்சி புறநகர் மாவட்ட செயலர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ் இந்துராஜ், ஒன்றிய செயலர்கள் உப்பிலியபுரம் டி முத்துக்குமார் துறையூர் எம்.ஆனந்தன், உப்பிலியபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.முத்துக்குமார் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்பையாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். அவர் தானம் அளித்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com