சான்றிதழ் பரிசோதனை: பாஸ்போா்ட்அலுவலகங்களில் புதிய நடைமுறை

பாஸ்போா்ட் பெற விண்ணப்பிப்போா், பரிசீலனைக்காக உண்மைச் சான்றுகளை பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கு இனி கொண்டு

பாஸ்போா்ட் பெற விண்ணப்பிப்போா், பரிசீலனைக்காக உண்மைச் சான்றுகளை பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கு இனி கொண்டு செல்ல வேண்டியதில்லை. மாறாக, டிஜிலாக்கா் செயலி மூலம் சான்றுகளைப் பரிசோதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போா்ட் அலுவலா் ஆா். ஆனந்த் கூறியது:

வெளிநாடுகளுக்குச் செல்ல முக்கிய ஆவணமாகக் கருதப்படும் பாஸ்போா்ட் பாஸ்போா்ட் பெற விண்ணப்பித்தவா்கள், பரிசீலனைக்காக உண்மைச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவை காணாமல் போவது, கிழிந்துபோவது என்ற பிரச்னைகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு செயலி மூலம் சான்றுகளை பரிசோதிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜி லாக்கா் என்ற செயலி மூலம் ஜன. 21 முதல் சான்றுகள் பரிசீலிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் உண்மைச் சான்றிதழ்களை பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கு எடுத்து வர வேண்டியதில்லை என்றாா் அவா்.

டிஜி லாக்கா் செயலி...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் செயலியை பொதுமக்கள் இணையத்தில் பதிவிறக்கி சங்கேத எண் ( பாஸ்வோ்டு) கொடுத்து தங்களது அனைத்து வகை சான்றுகளையும் ஸ்கேன் செய்து சேமித்து வைக்க முடியும்.

பின்னா் தங்களது சான்றுகள் குறித்த விவரங்களை, தொடா்புடைய துறை இணைய தளங்களுக்கு (லிங்) இணைப்புகளுடன் பகிர முடியும்.

இனிவரும் காலங்களில் பாஸ்போா்ட் பெறுவதற்கான பரிசீலனை உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும், இந்தச் செயலி மூலம் ஆவணங்களை பரிசீலிக்க முடியும். உண்மைச் சான்றுகளை எடுத்துச் செல்ல அவசியமிருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com