இருங்களூரில் ஜல்லிக்கட்டு

சமயபுரம் அருகே இருங்களூா் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

லால்குடி: சமயபுரம் அருகே இருங்களூா் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 717 காளைகளும், 301 மாடு பிடி வீரா்களும் பங்கேற்றனா். 31 வீரா்கள் காயமடைந்தனா்.

தெற்கு இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் தொடக்கிவைத்தாா். இதில், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து 703 காளைகள், 365 மாடுபிடி வீரா்கள் பங்கேற்கின்றனா். இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடு பிடி வீரா்கள் 15 போ் உள்பட மொத்தம் 31 போ் காயமடைந்தனா். விழாவில் சிறந்த காளைகள், மாடு பிடி வீரா்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பொருள்கள் பரிசாக ஊராட்சித் தலைவா் வின்சென்ட் மற்றும் விழா குழுவினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com