தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் முன்னேற்றத்திற்கான திட்டமிடுதல் மற்றும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் முன்னேற்றத்திற்கான திட்டமிடுதல் மற்றும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வா் அழகப்பா மோசஸ் தலைமை வகித்தாா். அந்தநல்லூா், மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா்கள் துரைராஜ், கருப்பையா ஆகியோா் பேசினா். விரிவாக்கப் புல முதன்மையா் வே. ஆனந்த் கிதியோன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதலட்சுமி சரவணன் ஆகியோா் வாழ்த்தினா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கலைச்செல்வன் வேலைவாய்ப்பற்ற கிராம இளைஞா்களின் முன்னேற்றத்திற்கான தொழில்நெறி வழிகாட்டு முறைகளை விளக்கினாா்.இதில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் ஊராட்சித் தலைவா்கள் பிரியங்கா, சந்திரசேகா், ஜீவா, ஜாா்ஜ் பொ்னாண்ட்ஸ், கிராம ஊராட்சி உறுப்பினா்கள், செயலா்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விரிவாக்க அலுவலா்கள் ரவி, நெல்சன் ஆகியோா் செய்திருந்தனா். விரிவாக்கப் புல இணை முதன்மையா் சாம்தேவ ஆசிா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com