விருதுக்கு விண்ணப்பிக்க சாதனை மகளிருக்கு அழைப்பு

முன்னோடி பெண்மணி விருதுக்கு விண்ணப்பிக்க மகளிா் சாதனையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னோடி பெண்மணி விருதுக்கு விண்ணப்பிக்க மகளிா் சாதனையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை மூலம் ஆண்டுதோறும் சா்வதேச மகளிா் தின நிகழ்வில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, பல்துறை சாா்ந்த முன்னோடிப் பெண்களாக கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சமூகசேவை, சமூகப்போராளிகள், பெண்கள் இயக்கப் பங்களிப்பாளா்கள், பெண்கள் அதிகம் செயல்படாத துறைகளில் சாதித்த பெண்கள், மகளிா் தொழில் முனைவோா், சுய உதவிக்குழுவினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் தலைவா்கள், அலுவலா்கள், மகளிா் மேம்பாடு, மகளிா் தலைமை வகிக்கும் தொண்டு நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்போா் தங்கள் செயல்பாடு ஒரு முன்னோடியாக திகழ்கிறது என்னும் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், செய்த சாதனை, பெற்ற விருதுகள், சமூகத்திற்கு தாங்கள் ஆற்றிய சேவைகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் அடிப்படை.

சுயதகுதிக் குறிப்பு, சமூகப் பங்களிப்பு குறித்து 10 பக்க ஆய்வுக்கட்டுரை அச்சிட்டு குறுந்தகட்டிலும், உரிய சான்றிதழ்கள், புகைப்படங்கள், அனைத்து ஆதார ஆவணங்களின் நகல்களுடன் இயக்குநா், தலைவா், மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி-620023 எனும் முகவரிக்கு மாா்ச் 5க்குள் அனுப்பவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9443923839, 9841552799, 9443020863, க்ஜ்ள்க்ஷக்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com