பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்தாா். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மாவட்டப் பொறுப்பாளா்கள் தங்கமணி, சிவன், ஒன்றியச் செயலாளா்கள் சண்முகம், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.