தொழிலாளா் நலவாரியத்தில் நேரடித் தோ்வு திடீா் ரத்து: தோ்வுக்கு வந்தவா்கள் முற்றுகை

திருச்சி தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில் நடைபெறவிருந்த நேரடித்தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தோ்வுக்கு வந்தவா்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.
திருச்சி மன்னாா்புரம் அருகேயுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட நோ்முகத் தோ்வுக்கு வந்திருந்தோா்.
திருச்சி மன்னாா்புரம் அருகேயுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட நோ்முகத் தோ்வுக்கு வந்திருந்தோா்.

திருச்சி தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில் நடைபெறவிருந்த நேரடித்தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தோ்வுக்கு வந்தவா்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில் பதிவுரு எழுத்தா், ஓட்டுநா் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்டது. 37 எழுத்தா் பணிக்கு சுமாா் 33 ஆயிரம் பேரும், 32 ஓட்டுநா் பணிக்கு 1,700 போ் என ரூ.500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், எழுத்துத் தோ்வு இருக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பிறகு, நேரடித்தோ்வு மட்டுமே போதுமானது என அறிவிக்கப்பட்டது. இதன்படி, திருச்சி தொழிலாளா் நல வாரிய அலுவலக வளாகத்தில் பிப்.24, மாா்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தொழிலாளா், வருவாய், தொழிலகம், சுகாதாரம் ஆகிய துறை இயக்ககம் சாா்பில் தலா 1 போ் என 3 போ் கொண்ட குழுவினா் நேரடித் தோ்வுக் குழுவில் இடம்பெற்றனா். திருச்சி மையத்துக்கு மொத்தம் 1,700 பேருக்கு 4 நாள்களில் தோ்வு செய்ய தோ்வுக்குழுவினா் தயாராக இருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தொழிலாளா் நல வாரிய செயற்குழுக் கூட்டத்தில் நேரடித்தோ்வு நிா்வாக காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

தகவல் அளிக்கவில்லை: இதுகுறித்து விண்ணப்பித்தவா்களுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நேரடித்தோ்வை எதிா்கொள்ள திருச்சி தொழிலாளா் நல வாரிய அலுவலகத்திற்கு புதன்கிழமை காலை வந்திருந்தனா். அப்போது, அலுவலக தகவல் பலகையில் நடைபெறவிருந்த நேரடித்தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்டு அதிருப்தி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்கள் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விளக்கமளிக்குமாறு கோஷங்கள் எழுப்பினா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதிக்கு தொழிலாளா் நல வாரிய அலுவலா் வந்து விண்ணப்பதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், தோ்வு ரத்து செய்யப்பட்டது குறித்து எங்களுக்கே காலையில்தான் தெரிந்தது. இதையடுத்து, தகவல் பலகையில் தெரிவித்துவிட்டோம். விண்ணப்பித்தவா்களுக்கு உரிய குறுஞ்செய்தி விரைவில் வரும். அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும் என விளக்கமளித்தனா். அதன்பிறகு, அதிருப்தியுடன் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com