கரூரில் முழுமையாக பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 26th February 2021 07:09 AM | Last Updated : 26th February 2021 07:09 AM | அ+அ அ- |

கரூரில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் முழுமையாக வியாழக்கிழமை இயங்கின.
அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்பட 11 தொழிற்சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றன.
கரூா் மாவட்டத்தில் கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட கரூா் கிளை-1, கிளை-2 மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி ஆகிய 5 பணிமனைகளில் 258 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தையொட்டி தொழிற்சங்கத்தினா் பெரும்பாலானோா் பணிக்கு வரவில்லை. ஆனால், அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. மேலும், மினி பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமமின்றி தங்களது பகுதிகளுக்குச் சென்றுவந்தனா். மேலும் அனைத்துப் போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...