மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் முன்னாள் படைவீரா்களுக்கு பல்வேறு நிலைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் வழங்கப்படவுள்ளது.
எஸ்ஐ, ஏஎஸ்ஐ, தலைமைக் காவலா், காவலா் நிலையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது வரை உள்ள முன்னாள் படைவீரா்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி, விண்ணப்பம் பெற்று வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியா் சு. சிவராசு இதைத் தெரிவித்தாா்.