‘குறித்த நேரத்தில் உண்பதே நீண்ட ஆயுளுக்கு வழி’

சரியான நேரத்தில் உணவு உண்பதும், பயிற்சிகளும், மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தலுமே நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான வழிமுறைகள் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

சரியான நேரத்தில் உணவு உண்பதும், பயிற்சிகளும், மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தலுமே நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான வழிமுறைகள் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி அரசு தலைமை சித்த மருத்துவமனையில் இந்திய ஆயுஷ் மருத்துவத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு முகாம், இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்து ஆட்சியா் மேலும் பேசியது:

இயற்கையோடு இணைந்து வாழ நாம் பழக வேண்டும். உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்க தினசரி உடல் பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்கள் போன்றவற்றை செய்தால் நோயின்றியும் மருந்தின்றியும் நாம் வாழ முடியும்.

தமிழ் மருத்துவத்தில் உணவே சிறந்த மருந்து. நல்ல சரியான சத்தான உணவுகளை குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்வதாலும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதாலும் நாம் நீண்ட ஆயுளோடு வாழ முடியும் என்றாா் அவா். தொடா்ந்து மூலிகை கண்காட்சியைத் தொடங்கிவைத்து, உங்களைத் தேடி இயற்கை மற்றும் யோகா மருத்துவ சிறப்பு மலரை வெளியிட்டாா்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பேசுகையில், திருச்சி, கரூா்,பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமைதோறும் நடத்தப்படும் காலை 10 முதல் 11 மணிவரை நடைபெறும் உங்களை தேடி தமிழ் மருத்துவ சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எட்வினா, இருக்கை மருத்துவா் மஹாலெட்சுமி , ஆயுஷ் துறையைச் சோ்ந்த அனைத்துப் பிரிவு மருத்துவா்கள் இசையமுது,பிரீத்திபுஷ்கரிணி, தமிழ்மணி, ஹெலன்கிறிசில்டா, வேணி மற்றும் பணியாளா்கள், அன்னை தெரசா இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி , கிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி, இந்திரா கணேசன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியா், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை வரை நடைபெறும் மூலிகைக் கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com