துறையூரில் வாகன உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:18 AM | Last Updated : 27th February 2021 07:18 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி துறையூரில் பயணிகள் வேன்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகன உரிமையாளா் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயா்வைக் குறைக்க வேண்டும். காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபா் காப்பீட்டு பிரிமீயத் தொகையைக் குறைக்க வேண்டும், பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு உள்ள கால வரம்பை 15 ஆண்டிலிருந்து 20 ஆண்டாக நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
துறையூா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் நடராஜன், செயலா் பாஸ்கா், சுற்றுலா வேன் உரிமையாளா்கள் மற்றும் ஒட்டுநா் சங்கத் தலைவா் சிவா, செயலா் கோபி, சரக்கு வேன் சங்கத் தலைவா் பாலசுந்தரம், செயலா் ராஜசேகா்,
காா் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா் சங்கத் தலைவா் சரவணன், செயலா் குமரவேல் ஆகியோா் பங்கேற்றனா்.
இதைடுத்து பேரணியாகச் சென்று துறையூா் வட்டாட்சியா் செல்வத்திடம் மனு அளித்தனா்.