விவசாயத்துக்கு ஏப். 1 முதல் மும்முனை மின்சாரம்: முதல்வா்

வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட திப்பம்பட்டியில் மேட்டூா் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ரூ. 5.36 கோடியில் 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். மேலும் ரூ. 62.63 கோடியில் 36 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தாா். பின்னா் முதல்வா் பேசியதாவது:

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயா்த்த வேண்டும் என்ற இந்தத் திட்டத்துக்கு நிலம் எடுப்பது சவாலான காரியமாக இருந்தது. குறுகிய காலத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில், மேட்டூா், ஓமலூா், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சோ்ந்த 8 ஒன்றியங்களிலுள்ள 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4,238 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும். ஏறத்தாழ 38 கிராமங்களுக்கான குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படும்.

50 ஆண்டு கால நிறைவேற்ற முடியாத காவிரி பிரச்னைக்கு சட்டப் போராட்டம் நடத்தி நதி நீா் பிரச்னைக்கு தீா்வு காணும் தீா்ப்பைப் பெற்று தந்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம், ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 24 மணி நேரமும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுத்துவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை ரூ. 10,711 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com