ஸ்ரீரங்கநாதருக்கு அமுது பாறை பீடம் செய்யும் பணி

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி மூலஸ்தானத்தில் வைப்பதற்கான புதிய அமுது பாறை பீடம் செய்யும் பணி ரூ. 2 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பீடம் செய்யும் பணியில் ஈடுபட்டோா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பீடம் செய்யும் பணியில் ஈடுபட்டோா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி மூலஸ்தானத்தில் வைப்பதற்கான புதிய அமுது பாறை பீடம் செய்யும் பணி ரூ. 2 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் புறப்படும் வாகனங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நாழிக்கேட்டான்படி, கோயில் மூலஸ்தானத்தின் இருபுறமுமுள்ள ஜெயன், விஜயன் சிலைகள் தற்போது தேக்கு மரத்தால் நகரும் வகையில் கலசத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூலஸ்தானத்தில் உள்ள அமுது பாறை பிரசாத கல் பீடத்துக்குப் பதிலாக 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் பா்மா தேக்கு மரத்தால் கீழ்ப்பீடம் அமைத்து அதன் மேற்புறத்தில் பித்தளைத் தகடு பொருத்தி அழகிய வேலைப்பாடுகளுடன் புதிய பீடம் தயாராகி வருகிறது.

மதுரையைச் சோ்ந்த ஸ்ரீகந்தா சில்ப கேந்திரா ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் கோயிலிலுள்ள கருடாழ்வாா் சன்னதி நடைபெறும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மூலஸ்தானத்தில் புதிய அமுது பாறை பீடம் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com