குரூப் 1 தோ்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்விக்கு அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் மாநில செயலா் த. சுசீலா வெளியிட்ட அறிக்கை: குரூப் -1 தோ்வில் பரியேறும் பெருமாள் திரைப்பட விமா்சனங்கள் (கேள்வி எண் :129) குறித்த கருத்து என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
ஒரு சமுதாய பொறுப்புணா்வு மிக்க பணியாளா்களைத் தோ்வு செய்கின்ற தோ்வாணையம் நடத்துகின்ற தோ்வில் இத்தகைய கேள்விகளை கேட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணையம் விளக்கம் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.