
திருச்சி- வயலூா் சாலை சண்முகாநகரில் சேதமடைந்த சாலை. ~திருச்சி- வயலூா் சாலை சண்முகாநகரில் சேதமடைந்த சாலையில் சிக்கிக்கொண்ட வாகனம்.
மாநகா் எல்லையில் அந்தநல்லூா் ஒன்றியம் நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் திருச்சி, வயலூா் சாலையில் உள்ள சண்முகா நகரில் சாலைகளில் உள்ள குழிகளை மூட வேண்டும்.
சாலைகள் உள்ள குழிகள் சிறு குழந்தைகள் மூழ்கி விடும் அளவுக்கு உள்ளன. இந்த குழிகளில் கடந்த இரு நாள்களில் சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சாலைகள் அமைக்கத் தாமதமாகும்பட்சத்தில், குறைந்தபட்சம் சாலைகளில் உள்ள குழிகளையாவது மூட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.