வேன் மோதி காயமடைந்த எலக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ராம்ஜிநகரை அடுத்த கள்ளிக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வமணி மகன் குணசேகா் (26), எலக்ட்ரீசியன். இவா் திங்கள்கிழமை இரவு தனது உறவினா் பொன்னருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தாா்.
திண்டுக்கல் சாலையில் ராம்ஜிநகா் பெட்ரோல் பம்பு அருகே சென்றபோது வேன் மோதி படுகாயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இவா்களில் குணசேகா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பொன்னா் தீவிர சிகிச்சைக்காக வயலுாா் மெயின் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.