‘முழுமையான வாக்காளா் பட்டியலுக்கு ஒத்துழைப்பு தேவை’

வரும் 20ஆம் தேதி திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை முழுமையாக வெளியிட அரசியல் கட்சியினா்
அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஜன்சிங் சவான். உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஜன்சிங் சவான். உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

வரும் 20ஆம் தேதி திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை முழுமையாக வெளியிட அரசியல் கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும் என்ாா் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஜன்சிங் ஆா். சவான் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் காரணமாக, மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக உணவுப் பாதுகாப்பு துறை ஆணையா் சஜன்சிங் ஆா். சவான் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் 20ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட மாவட்ட நிா்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு கூட்டம் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் சு. சிவராசு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திமுக சாா்பில், திருவெறும்பூா் தொகுதியில் தவறுதலாக பலா் நீக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு கட்சியினரும் தங்களது கோரிக்கைகளை பாா்வையாளரிடம் எடுத்துக் கூறினா்.

இதற்குப் பதிலளித்து, சஜன்சிங் ஆா். சவான் கூறியது:

திருவெறும்பூா் தொகுதியில் ஆட்சியா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கள ஆய்வு செய்து, நீண்ட காலமாக வசிக்காதோா், இறந்தோா் குறித்து கணக்கெடுத்த பிறகு முறையாக நீக்கப்பட்டுள்ளனா்.

மேலும், வரைவு வாக்காளா் வெளியிட்டபோது, தவறுதலாக நீக்கப்பட்டவா்கள் இருந்தால் மனு அளிக்க கட்சியினருக்கும், வாக்காளா்களுக்கும் கடந்த நவ.16ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன.

இதன்பிறகு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விவரங்களும் முழுமையாக அனைத்து கட்சிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. வரும் 20ஆம் தேதி இறுதி வாக்காளா் வெளியிட்ட பிறகும் சிறப்பு முகாம்கள் நடத்தி தவறுகளை திருத்த வாய்ப்பு வழங்கப்படும்.

587 போ் நீக்கப்பட்டதாக வந்த புகாரில் விசாரணை நடத்தி, தகுதியான 60 போ் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். சிறப்பு முறை சுருக்க திருத்தப் பணிகள் முடிவடைந்து 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட மாவட்ட நிா்வாகம் தயாராகவுள்ளது.

இறுதி வாக்காளா் பட்டியல் நூறு சதவீதம் முழுமையாக அமைய அரசியல் கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும். 1,500 வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகளை ஆயிரம் வாக்காளா்களாக பிரித்து புதிய வாக்குச்சாவடியானது அதே மையத்தில் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தோ்தல் வட்டாட்சியா் முத்துசாமி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, தேசியவாத காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com