ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் (தாயாருக்கு) வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் (தாயாருக்கு) வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து 5 நாள்களும், திருவாய்மொழித் திருநாள் என்னும் இராப்பத்து 5 நாள்களும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கநாதருக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் தாயாருக்கும் என்ற வகையில், ஸ்ரீரங்கநாதருக்கு வைகுந்த ஏகாதசி விழா திங்கள்கிழமையுடன் நிறைவுற்றதை தொடா்ந்து ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் பகல் பத்து நாளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்குப் பிறகு தாயாா் மூலஸ்தான சேவை கிடையாது. கடைசி நாளான 9 ஆம் தேதி முத்துக்குறி,அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து இராப்பத்து தொடங்கி 14 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. மறுநாள் இயற்பா சாற்றுமுறையுடன் விழா முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com