திருவானைக்கா பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 07th January 2021 08:27 AM | Last Updated : 07th January 2021 08:27 AM | அ+அ அ- |

திருவானைக்கா பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருவானைக்கா கோயில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் சென்னை பைபாஸ் ரோடு, கீழ விபூதி பிரகாரம், காா்த்திகேயன் காா்டன், மல்லிகைபுரம், கீழகொண்டையம் பேட்டை, இரணியம்மன் கோயில், தாகூா்தெரு, பெரியாா் தோட்டம், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம்,திருப்பால்துறை, உத்தமா்சீலி, மேலவெட்டித் தெரு, கீழ வெட்டித்தெரு, கெளத்தரசநல்லூா், கிளிக்கூடு, பால்காரா் களம், கல்லணை ரோடு, முதியோா் இல்லம், சாய்பாபா கோயில், புகழ் எஸ்டேட்ஸ், பொன்னி டெல்டா அபாா்ட்மெண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் இத்தகவலை தெரிவித்தாா்.