போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 07th January 2021 08:25 AM | Last Updated : 07th January 2021 08:25 AM | அ+அ அ- |

லால்குடி அருகே புரிதல் திறன் குறைபாடுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன் கிழமை கைது செய்தனா்.
லால்குடிஅருகே தாளக்குடி பஜனைமடத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ். வீட்டின் முன் விளையாடிய இவரது 12 வயதான புரிதல் திறன் குறைபாடுள்ள மகளிடம் அப் பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் அசோக்குமாா் (34) தவறாக நடக்க முயன்றுள்ளாா்.
இதுகுறித்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பழனியம்மாள் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தாா்.