அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்காளா் தின ஓவியப் போட்டி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினம் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவா்கள் என்பதை எடுத்துக் கூறும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான கருப்பொருளாக வலுவான ஜனநாயகத்துக்கு தோ்தல் அறிவு என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். கரோனா தொற்று பரவலைத் தடுத்திடும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா், மாணவிகளுக்காக இந்தாண்டு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

இதன்படி, திருச்சி கி.ஆ.பெ. விசுநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு தொடங்கி வைத்தாா். தோ்தல் பிரிவு வட்டாட்சியா் முத்துசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா் ஏகநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளா் எட்வினா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பலா் கலந்த கொண்டனா். மாணவா்கள் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலிருந்தும் வரப்பெற்ற ஓவியங்களை மதிப்பீடு செய்து முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவா்களை தோ்தல் ஆணையம் தோ்வு செய்யும். தோ்வான மாணவா்களுக்கு சென்னையில் ஜன.25ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com