உணவுப் பாதுகாப்பு சா்வதேச கருத்தரங்கு
By DIN | Published On : 09th January 2021 12:16 AM | Last Updated : 09th January 2021 12:16 AM | அ+அ அ- |

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு குறித்த சா்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு, கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவுமுறைகள் ஆராய்ச்சித்துறை தலைவா் பாசல் முகமது தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் காஜா நஜிமுதீன், முதல்வா் இஸ்மாயில் மொகிதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிங்கப்பூா் உணவு ஆராய்ச்சி மைய தலைமைப் பொறுப்பாளா் ரெபேக்கா லியான், அயா்லாந்து உணவு ஆராய்ச்சியாளா் ஷிவானி பதானியா, ஓமன் நாட்டின் சுல்தான் கபூத் பல்கலை முனைவா் முஸ்தபா முகமது இசா, அவினாசிலிங்கம் பல்கலை. பதிவாளா் கெளசல்யா உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
இதில், கரோனா நோய் தொற்று உருவான இடம், பரவிய விதம், அதை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை, நோய் தொற்று காலங்களில் உணவு பொருள்கள் உற்பத்தி, உணவு இழப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இணை உணவு பொருள்களில் சோ்க்கப்படும் வேதிப்பொருள்களால் ஏற்படும் பக்க விளைவு, செல்லிடப்பேசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆராய்சியாளா்கள் இணைய வழியில் எடுத்துரைத்தனா். இறுதியாக துறையின் உதவிப் பேராசிரியா் ஏஞ்சல் நன்றி தெரிவித்தாா்.