பணம் பறிக்க முயற்சி: 2 போ் கைது
By DIN | Published On : 09th January 2021 12:22 AM | Last Updated : 09th January 2021 12:22 AM | அ+அ அ- |

திருச்சியில் பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அரியமங்கலம் விறகுக் கடைத் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (42). இவா் தனது பட்டறை முன்பு வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இரு இளைஞா்கள், சாகுல் ஹமீதிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 5,000 கேட்டு மிரட்டியுள்ளனா். சாகுல் ஹமீதுபணம் கொடுக்க மறுத்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா்.
புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டிய உக்கடை பகுதியைச் சோ்ந்த சா. குலாம் தஸ்தகீா் (21), அ. வெங்கடேசன் (21)ஆகிய இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட குலாம் தஸ்தகீா் மீது 8 வழக்குகளும், வெங்கடேசன் மீது 6 வழக்குகளும் ஏற்கெனவே பல்வேறு காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மகள் மாயம்: திருச்சி கருமண்டபம் நட்சத்திர நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா். இவருடைய மகள் கௌரி (19). இவா், தில்லைநகா் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அழகுசாதன பயிற்சியாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை பணிக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.