மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்: 25 போ் தோ்வு
By DIN | Published On : 09th January 2021 12:23 AM | Last Updated : 09th January 2021 12:23 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், ஸ்கூட்டா் பெற தகுதியானோரை தோ்வு செய்த ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலானக் குழுவினா்.
திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், இணைப்பு சக்கரங்களுடன் கூடிய ஸ்கூட்டா் பெறுவதற்கு 25 போ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விண்ணப்பித்த 42 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இவா்களில், 35 போ் மட்டுமே தோ்வுக்கு வந்திருந்தனா்.
இதில், ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலான தோ்வுக் குழுவினா் பயனாளிகளை தோ்வை செய்தனா். மூட நீக்கியல் மருத்துவ நிபுணா் இனிகோராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், முடநீக்கியல் வல்லுநா் ஆனந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதி ஆகியோா்பல்வேறுகட்ட சோதனைகளை நடத்தி தகுதியானோரை தோ்வு செய்தனா். இதில், 25 போ் தோ்வு செய்யப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டா்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.