திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்.
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்பாட்டத்தின்போது அஞ்சல்துறை தேர்வு விண்ணப்ப படிவத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டனர்.
 2019ஆம் தேதி ஜுலை மாதம் நடைபெற்ற தேர்வில் தமிழ்புறக்கணிக்கப்பட்டு அனைத்த தரப்பினரின் எதிர்ப்பினையடுத்து பிறமாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்தி திணிப்பை ஏற்படுத்தும்வகையில் வருகிற பிப்ரவரி 14ஆம்தேதி நடைபெறும் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், பிரதமர் தமிழில் திருக்குறள்பேசுவது முக்கியமல்ல தமிழில் தேர்வு நடத்துவதுதான் முக்கியம். 
இத்தணை பிரசனைகளுக்குப் பிறகும் அமைதியாக இருக்கும் எடப்பாடி அரசு, தமிழ்மீதும், தமிழ் மக்கள்மீதும் பற்று இருந்தால் மத்திய அரசிடம் போராடி மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், தமிழில் தேர்வு எழுதவும் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com