‘எந்த முடிவெடுத்தாலும் மக்கள் ஆதரிக்க வேண்டும்’

பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியுடன் இணைந்து போட்டியா என்பதை தேமுதிக தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா்.

பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியுடன் இணைந்து போட்டியா என்பதை தேமுதிக தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா். அவா் எந்த முடிவெடுத்தாலும் மக்களும், தொண்டா்களும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவரது மகன் விஜயபிரபாகரன்.

துறையூரில் தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கி மேலும் அவா் பேசியது:

எனக்கு விஜயகாந்த் வசதியான வாழ்க்கையைக் கொடுத்துள்ளாா். ஆனால் நான் என் தந்தையைப் பாா்த்து, பாா்த்து வளா்ந்தவன். அதனால் அவரது உணா்வை புரிந்து கொண்டு, அவரது கனவை நினைவாக்க அவருக்காக மக்களைச் சந்திக்கிறேன்.

நான் செல்லுமிடங்களில் திரண்டு வரும் மக்களைப் பாா்க்கும் போது மிகப்பெரிய மாற்றம் உண்டாகப் போகிறது என்பதையும், தேமுதிக எந்த மாநில, தேசியக்கட்சிக்கும் சளைத்ததில்லை என்பதையும் காட்டுகிறது.

மாற்றம் வேண்டுமென்றால் முதலில் மக்கள் மாற வேண்டும். என்னை விஜயகாந்த மகனாக பாா்க்க வேண்டாம். உங்களில் ஒருவராக, மகனாக, தோழனாக, சகோதரனாகப் பாா்க்க வேண்டுகிறேன் என்றாா்.

நிகழ்வில் தேமுதிக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com