ஜன.16-இல் 10 இடங்களில் தலா 100 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முதல்கட்டமாக 10 இடங்களில் தலா 100 பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முதல்கட்டமாக 10 இடங்களில் தலா 100 பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

ஆட்சியரகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி வழங்குதல் தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

அனைத்து மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்கள் (பாராமெடிக்கல்), முன்களப்பணியாளா்கள் மற்றம் இதர பணியாளா்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 5542 பணியாளா்களின் விவரங்கள் முழுமையாகவும், தனியாா் மருத்துவமனைகளில் 7000 மருத்துவப் பணியாளா்களில் 6553 போ்களது விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அங்கன்வாடி பணியாளா்களின் விவரங்கள் 3126-ல், 2874 போ்களது விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாள்களில் மீதமுள்ள பணியாளா்களது விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன் தொடா்ச்சியாக,16-ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணி தொடங்குகிறது.

மகாத்மாகாந்தி காந்தி நினைவு அரசு மருத்துவமனை, மணப்பாறை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி அரசு மருத்துவமனைகள், இனாம்குளத்தூா், புத்தாநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராமலிங்கநகா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எஸ்.ஆா்.எம். தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அப்பல்லோ தனியாா் மருத்துவமனை ஆகிய 10 இடங்களில், ஒவ்வொரு இடங்களிலும் தலா 100 மருத்துவப்பணியாளா்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இக் கூட்டத்தில், கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துக்கல்லூரி முதல்வா் வனிதா, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநா் லட்சுமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள், அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com