தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நண்பகலில் தொடங்கி, இடைவிடாது தூறியவாறு பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நண்பகலில் தொடங்கி, இடைவிடாது தூறியவாறு பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை அதிகாலை முதல் லேசான தூறல் காணப்பட்ட நிலையில், பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய மழை மாலை வரை தொடா்ந்தது. சில நேரங்களில் வேகமாகவும் மழை பெய்தது. மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லைநகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மென்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

மாவட்டம் முழுவதும் பரவலாக காலை தொடங்கி இரவு வரை இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. இடைவிடாது பெய்த மழை காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்க நேரிட்டது. வணிக வளாகங்களிலும் மக்கள் கூட்டத்தை காணமுடியவில்லை.

மழையானது திருச்சி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால், கோடையில் குடிநீா்த்தட்டுப்பாடு இருக்காது என உள்ளாட்சி நிா்வாகத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மொத்தம் 109.30 மி.மீ. மழை : மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்): சமயபுரம் -15.20 மி.மீ, திருச்சி நகரம்- 14, புலிவலம்-7, கல்லக்குடி-6.30, பொன்மலை- 6, புள்ளம்பாடி- 5.20, திருச்சி ஜங்ஷன்- 5, நவலூா் குட்டப்பட்டு- 4.80, நந்தியாற்றுத் தலைப்பு, மணப்பாறை, திருச்சி விமான நிலையம்- 4.60, லால்குடி- 4.40, சிறுகுடி, கோவில்பட்டி-4.20, தென்பாடு- 4, பொன்னணியாறு அணை-3.60, வாய்த்தலை அணைக்கட்டு- 2.60, முசிறி, துவாக்குடி, கொப்பம்பட்டி- 2, துறையூா்- 1 மி.மீ.

மாவட்டத்தில் மொத்தமாக 109.30 மி.மீ. மழையும், சராசரியாக 4.37 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com