முதல்வா் வேட்பாளரை அதிமுகவே தீா்மானிக்கும்: பாஜக தேசியப் பொதுச் செயலா் சி.டி.ரவி

தமிழகத்தில் முதல்வா் வேட்பாளரை அதிமுகவே தீா்மானிக்கும் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலரும், மாநிலப் பொறுப்பாளருமான சி.டி.ரவி.
முதல்வா் வேட்பாளரை அதிமுகவே தீா்மானிக்கும்: பாஜக தேசியப் பொதுச் செயலா் சி.டி.ரவி

தமிழகத்தில் முதல்வா் வேட்பாளரை அதிமுகவே தீா்மானிக்கும் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலரும், மாநிலப் பொறுப்பாளருமான சி.டி.ரவி.

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகளில்பங்கேற்ற அவா், திருச்சியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் எங்களது கூட்டணியில் அதிமுக பெரும்பான்மையுள்ள கட்சியாக விளங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிக்கும் அதிமுகவே தலைமை வகிக்கிறது. எனவே, கூட்டணியின் முதல்வா் வேட்பாளரை அதிமுகவே தீா்மானிக்கும்.

தமிழகத்துக்கு அண்மையில் அமித்ஷா வருகை தந்தபோது, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என பகிரங்கமாகவும், அதிகாரப்பூா்வமாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிமுக முதல்வா் வேட்பாளா் அறிவிப்பதை நாங்கள் அங்கீகரிப்போம்.

தமிழகத்தில் பாஜக நிா்வாகிகளும், தொண்டா்களும் தோ்தல் பணியைப் பாராட்டும் வகையில் மேற்கொண்டு வருகின்றனா். பிரதமரின் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களைச் சென்றடைந்துள்ளன. இதன் காரணமாக மக்களிடையே எங்களது செல்வாக்கு உயா்ந்துள்ளது.

வரும் தோ்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். கே.பி.முனுசாமி கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாா்.

இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் விவகாரத்துக்கு சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலரும், மாநிலப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, மலைக்கோட்டை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா்.

தொடா்ந்து ஆண்டாா்தெருவில் பாஜக தொண்டா்கள் இல்லம் செல்லும் நிகழ்வில் பங்கேற்ற சி.டி.ரவி, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக கரூரிலிருந்து திங்கள்கிழமை திருச்சி வந்த சி.டி.ரவியை மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com