இதுவரை19 ஆயிரம் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரம் கட்டுமான நலவாரியத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளா் நலவாரியம் தெரிவித்துள்ளது.
லால்குடியில் பொங்கல் தொகுப்பு பெறும் கட்டுமானத் தொழிலாளா்.
லால்குடியில் பொங்கல் தொகுப்பு பெறும் கட்டுமானத் தொழிலாளா்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரம் கட்டுமான நலவாரியத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளா் நலவாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் துறையூா், மண்ணச்சநல்லூா், ஸ்ரீரங்கம், முசிறி (தொட்டியம்), லால்குடி, மணப்பாறை (மருங்காபுரி), திருச்சி (மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா்) ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மூலம் புதன்கிழமை இரவு 7 மணி வரை இந்தப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இத்தொகுப்பில் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 1 கிலோ பாசிப்பருப்பு, 500 மிலி சமையல் எண்ணெய், 100மிலி நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய 8 பொருள்கள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களில் இதுவரை 19 ஆயிரம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அந்தந்த வட்டங்களின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா்கள் பொங்கல் தொகுப்பு வழங்கும் பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பொங்கல் தொகுப்போடு வேட்டி, சேலையும் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திலிருந்து வேட்டி சேலை வரத் தாமதம் ஆனதால் பொங்கல் தொகுப்போடு வேட்டி சேலைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் வேட்டி சேலை வழங்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com