தோல் பதனிடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டு தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செம்பட்டு தோல் பதனிடும் தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செம்பட்டு தோல் பதனிடும் தொழிலாளா்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டு தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விமான நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி தொழிற்சங்கச் செயலா் பி. ராஜா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்துவது, போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள், 240 நாள்கள் பணிபுரிந்தோரை நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், தலைவா் வே. நடராஜா, வங்கி ஊழியா் சங்கப் பொதுச்செயலா் கோ. ராமராஜ், தரைக்கடை சங்கச் செயலா் அன்சா்தீன், சிபிஐ அமைப்புச் செயலா் எஸ். சிவா உள்ளிட்டோா் பேசினா். சங்கத் தலைவா் ஓ. சுப்பிரமணி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com