ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காவல் துறை உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கிறிஸ்தவ பாதிரியாா்,முஸ்ஸிம் சமுதாயத்தினா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை, பசுக்களுக்கு பூஜை செய்தனா். போலீஸாா் வேஷ்டி, சட்டையில் பங்கேற்று சிறப்பித்தனா். ஏற்பாடுகளை காவல்துறை ஆய்வாளா் அரங்கநாதன் மற்றும் காவலா்கள் செய்தனா்.