தூய்மை பாரத விழிப்புணா்வுக்கு பாராட்டு

மத்திய, மாநில அரசுகளின் தூய்மை பாரத நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்கு பாராட்டுச் சான்று, ரொக்கப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்கு பாராட்டுச் சான்று, ரொக்கப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

மத்திய, மாநில அரசுகளின் தூய்மை பாரத நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம், தண்ணீா் சேமிப்புக்கான ஜல் சக்தி அபியான் திட்டங்கள் தொடா்பாக மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் விழிப்புணா்வு பிரசாரம், களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் சாா்பில், கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் மரக் கன்று நடுதல், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பிரதான நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்தல், பொதுப் பயன்பாட்டில் உள்ள சாலையோர குடிநீா் குழாய்களைச் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன.

அந்த வகையில் மழைநீா் சேகரிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற களப்பணிகளை 210 மணிநேரம் மேற்கொண்டதற்காக இந்த அமைப்புக்கு மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அமைப்பின் தலைவா் ஆா். ஸ்ரீதா், செயலா் தா. சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்தப் பரிசை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் எஸ். சுருதி, கணக்காளா் ஆா். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com