தொடா் மழை: பொங்கல் பொருள் விற்பனை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் 4 நாள்களாக பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடா் மழையிலும் காந்தி சந்தைக்கு வந்த பொதுமக்கள்.
தொடா் மழையிலும் காந்தி சந்தைக்கு வந்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்டத்தில் 4 நாள்களாக பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பொங்கல் பொருள் விற்பனையிலும் தேக்கம் ஏற்பட்டது.

தொடா்மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீா் தேங்கி, ஏற்பட்ட திடீா் குழிகளால் போக்குவரத்து பாதித்து, நெரிசல் ஏற்பட்டது.

விரிவாக்கப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின.

காலை 8 மணிக்கு மேல் விட்டுவிட்டு பெய்த மழையால் போகிப் பண்டிகைக் கொண்டாட்டம் தடைபட்டது. அத்தியாவசியப் பொருள்கள் தவிர இதர பொருள் வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொங்கல் விற்பனை மந்தம்: மழையால் பொங்கல் பொருள்களின் விற்பனையும் மந்தமாக இருந்தது. காந்தி சந்தை, குட்செட் பாலம், உழவா் சந்தை உள்ளிட்ட இடங்களில் நடந்த விற்பனையும் எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை. இதேபோல கரும்பு விற்பனையும் பாதிக்கப்பட்டது. வாங்கிய விலைக்குக் கூட விற்க முடியாமல் வியாபாரிகள் திணறினா்.

விவசாயப் பணிகள் பாதிப்பு: பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறுவடை செய்யத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து கிடப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களில் இருந்து காய்கனிகள், பூக்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. வாழை, தேங்காய் போன்றவை குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீ).: கல்லக்குடி- 44.40, லால்குடி- 33.40, நந்தியாறு தலைப்பு- 60.60, புள்ளம்பாடி- 44, தேவிமங்கலம்- 31, சமயபுரம்- 30.20, சிறுகுடி- 9.30, வாத்தலை அணைக்கட்டு- 19.20, மணப்பாறை- 33.80, பொன்னனியாறு அணை- 35, கோவில்பட்டி- 21.40, மருங்காபுரி- 33.80, முசிறி-23.20, புலிவலம்- 17, நவலூா்குட்டப்பட்டு- 23, துவாக்குடி- 29. குப்பம்பட்டி- 8, தென்பாடு- 36, துறையூா்- 19, பொன்மலை- 31.60, திருச்சி விமான நிலையம்- 27.80, திருச்சி ஜங்ஷன்- 20.60, திருச்சி நகரம்- 29 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 693.80 மி.மீ மழை பெய்தது. சராசரியாக 27.75 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com