பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி; ரசிகா்கள் மகிழ்ச்சி

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி கிடைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி கிடைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருச்சி பெரியசூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இந்த நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி டிச.14-ல் மனு அளித்திருந்த நிலையில், அப்பகுதியில் சில நாள்களுக்கு முன் வாடிவாசல் அமைக்கப்பட்டு, பரிசுப் பொருள்களும் தயாராகின.

இதற்கிடையே போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய்த் துறை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்த பிறகும் செவ்வாய்க்கிழமை வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால் போட்டி ஏற்பாட்டாளா்கள், ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருந்தபோதும் தொடா் மழையால் திட்டமிட்டபடி ஜன.15இல் போட்டி நடக்குமா என்பது சந்தேகமே; புதன்கிழமை மழை பெய்யாவிடில் கண்டிப்பாக போட்டி நடத்த வாய்ப்புள்ளது; இல்லாவிடில் வேறு தேதியில் போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றனா் ஏற்பாட்டாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com