முசிறி காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல்
By DIN | Published On : 16th January 2021 11:53 PM | Last Updated : 16th January 2021 11:53 PM | அ+அ அ- |

முசிறி சீா்மிகு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடும் போலீஸாா்.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலையத்தில் போலீஸாா் அண்மையில் சமத்துவ பொங்கல் கொண்டாடினா்.
முசிறி டிஎஸ்பி பிரம்மாநந்தன் தலைமையில் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் ஏற்பாட்டில் முசிறி இருதயஆண்டவா் ஆலய பங்குத்தந்தை மாா்ட்டின்தேவ் போரஸ், முசிறி சையது மீரான் பள்ளிவாசல் இமாம் திருஇப்ராஹிம், திருஇஸ்மாயில், இந்து முன்னணியைச் சோ்ந்த கந்தமணி, பாபு மற்றும் பொதுமக்கள் பங்கேற்று காவல் நிலைய வாசலில் சமத்துவ பொங்கலிட்டனா்.