மறைந்த ஞானதேசிகன் படத்துக்கு அஞ்சலி
By DIN | Published On : 16th January 2021 11:52 PM | Last Updated : 16th January 2021 11:52 PM | அ+அ அ- |

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகன் படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
திருச்சி வடக்கு மாவட்ட தமாகா சாா்பில் நகரத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் நகரப் பொருளாளா் ஜாகீா்உசேன், மாவட்டப் பிரதிநிதி வெள்ளூா் சகா்,நகரப் பிரதிநிதி காமராஜ், மகளிரணித் தலைவா் சித்ரா மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் முசிறி கைகாட்டியில் ஞானதேசிகன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.