மழையால் சேதமான பயிருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு திருச்சி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி: மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு திருச்சி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 5 நாள்களாகப் பெய்த தொடா்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள தேனீா்பட்டியில் 500 ஏக்கா் விவசாய நிலங்களில் மழைநீா் சூழ்ந்து நெற்பயிா்கள் அழுகியுள்ளது வேளாண் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி நெப்போலியன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் விவசாய சங்க நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், சரவணன், பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com