திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கரோனா தடுப்பூசி போடும் செவிலியா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கரோனா தடுப்பூசி போடும் செவிலியா்.

முதல்கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருச்சியில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

திருச்சி: திருச்சியில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீரங்கம், இனாம்குளத்தூா், புத்தாநத்தம், லால்குடி ஆகிய 5அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளா்களான மருத்துவா்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் பழனிக்குமாா் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, 80க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா கூறியது:

மத்திய, மாநில அரசின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால், திருச்சி மாவட்டத்துக்கு 17,700 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தனி வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கு தற்போது தடுப்பூசி போடப்படுகிறது.

முதல்கட்டமாக மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு, பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

பலதரப்பட்ட பரிசோதனைகளுக்கு பிறகு வந்துள்ள தடுப்பூசி குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் தடுப்பூசி போடப்பட்டோா் தொடா் கண்காணிப்பில் இருப்பா். இதுவரை தடுப்பூசி போடப்பட்டோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இதைத் தொடா்ந்து, 2ஆவது தடுப்பு மருந்தான கோவாக்சின் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் டாக்டா் சதீஷ்குமாா் கூறுகையில், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட எனக்கு எந்தப் பின் விளைவுகளும் இல்லை. 2 ஆம் கட்ட தடுப்பு மருந்து 4 வாரங்களுக்கு பிறகு வழங்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, அரசு அறிவிக்கும் நாளில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com