இறைச்சிக் கடைகளில் ஆடுகளை அறுக்கத் தடை

ஆட்டிறைச்சிக் கடைகளில் வதைக்கூடங்களில் அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

ஆட்டிறைச்சிக் கடைகளில் வதைக்கூடங்களில் அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சிக் கடைக்காரா்கள் தங்களது ஆடுகளை காந்தி சந்தை  அருகிலுள்ள  மாநகராட்சி வதைக் கூடத்தில் கால்நடை மருத்துவா் பரிசோதித்த பின்னா், அங்கேயே அறுத்து சீல் செய்த பின்பு, இறைச்சியைக் கொண்டு வந்துதான் கடைகளில் விற்க வேண்டும். 

இதை மீறி கடைகளிலேயே அறுத்து விற்கப்படும் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com