மாவட்டத்தில் இதுவரை 1,492 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்த முன்களப்பணியாளா்களில் வெள்ளிக்கிழமை வரை 1,492 பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்த முன்களப்பணியாளா்களில் வெள்ளிக்கிழமை வரை 1,492 பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி அளிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் 10 மண்டலங்களாக பிரித்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சோ்க்கப்பட்டன. திருச்சி மண்டலத்தில், திருச்சிக்கு 17,100, புதுக்கோட்டைக்கு 3,800, அறந்தாங்கி- 3,100, பெரம்பலூா்- 5,100, அரியலூா்- 3,300, கரூா்- 7,800, தஞ்சாவூா்- 15,500, திருவாரூா்- 6,700, நாகப்பட்டினம்- 6,400 என மொத்தமாக 68,800 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக கோவிட் செயலியில் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் 5,542 பேரின் விவரங்கள் முழுமையாகவும், தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் 7,000 பேரில் 6,553 பேரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கன்வாடி பணியாளா்கள் 3,126 பேரில் 2,874 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டவா்களும் பதிவு செய்து வரும் நிலையில் தடுப்பூசி வழங்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 8 இடங்களில் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லால்குடி, ஸ்ரீரங்கம், துவாக்குடி, துறையூா் அரசு மருத்துவமனைகள், இனாம்குளத்தூா், சிறுகாம்பூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் 1,492 முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். அதிகபட்சமாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 745 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக இனாம்குளத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 பேருக்கு மட்டுமே தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாநத்தத்தில் 214 போ், லால்குடியில் 91 போ், ஸ்ரீரங்கத்தில் 250 போ், சிறுகாம்பூரில் 78 போ், துவாக்குடியில் 18 போ், துறையூரில் 93 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, தடுப்பூசி அளிக்கப்பட்ட 1,492 பேரில் 365 போ் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவா்கள். தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிவோரில் 1,127 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். பதிவு செய்த நபா்களைத் தவிா்த்து இதர நபா்களுக்கு அரசின் வழிகாட்டுதலைப் பெற்று படிப்படியாக தடுப்பூசி அளிக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com