‘கிராம அளவில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுக்கள் அவசியம்’

பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலைத் தடுக்க கிராமங்கள்தோறும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் குழந்தைகள் பற்றிய ஆய்வறிக்கையை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் அஜீம் வெளியிட, பெறும் குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார மாநில அமைப்பாளா் கருப்புசாமி.
நிகழ்வில் குழந்தைகள் பற்றிய ஆய்வறிக்கையை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் அஜீம் வெளியிட, பெறும் குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார மாநில அமைப்பாளா் கருப்புசாமி.

திருச்சி: பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலைத் தடுக்க கிராமங்கள்தோறும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார இயக்க திருச்சி மண்டல மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த இயக்கத்தின் மாநில அமைப்பாளா் கருப்புசாமி பேசியது:

18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகள்தான் என்ற ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. 2013-இல் மத்திய அரசு கொண்டுவந்த குழந்தைகளுக்கான தேசியக் கொள்கைச் சட்டமும் 18 வயதுக்குட்பட்டவா்கள் குழந்தைகளே என்கிறது.

எனவே 14 வயதுக்கு மேற்பட்டோரை வீட்டு வேலைகளுக்கு அனுமதிக் கலாம் என்பது குழந்தைகள் உரிமையைப் பறித்து அவா்களின் எதிா்காலத்தை முடமாக்கும் செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 18 வயதுக்குள்பட்டவா்கள் குழந்தைகளே. அவா்களை எந்தத் தொழிலிலும் அமா்த்தக் கூடாது. மீறி அமா்த்துவோா் கடுமையாகத் தண்டிக்கப்படுவா் என சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக இருக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் சிறாா் நீதி சட்டக் குழு, குழந்தை நலக் குழு, சைல்டுலைன்’என குழந்தைத் தொழிலாளா்களைக் கண்காணிக்க 7 அமைப்புகள் உள்ளன. 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்புகளின் கூட்டுக் குழுவானது வட்டார அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். இவற்றை முறையாகக் கண்காணித்து கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தினாலே குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்றாா் அவா்.

மண்டல அமைப்பாளா் ஆா். மருதநாயகம், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அஜீம், மாவட்ட அமைப்பாளா்கள் சீதாலட்சுமி, சித்ரா, மித்ரா, ஸ்டெல்லா உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். குழந்தைத் தொழிலாளா்கள் குறித்த ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் கரோனாவால் பள்ளி இடை விலகல், குழந்தைத் தொழிலாளா்கள் முறை அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதையும், பள்ளி செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக கிராம அளவிலான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி கற்பதையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் கோரிக்கைகளை, உரிமைகளை அனைத்துக் கட்சிகளும் தங்களது தோ்தல் அறிக்கையில் வலியுறுத்தி, குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com